நாளை மாட்டு பொங்கல் திருநாள் வழிபட உகந்த நேரம் இதோ.?! - Seithipunal
Seithipunal


மாட்டு பொங்கல்

மாட்டு பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம் :

காலை 06.55 முதல் 08.20 வரை

காலை 11.16 முதல் 01.55 வரை

மாலை 05.46 முதல் 08.16 வரை
மாட்டு பொங்கல் திருநாள் :

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

கால்நடைகளை அழகுப்படுத்துதல் :

மாட்டு பொங்கல் அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும்போது பொங்கலோ பொங்கல்! மாட்டு பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக! என்று கூறுவார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maattupongal 2022 thirunal time


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->