இந்த இடத்தில் மட்டும் கேது இருந்தால்... நீங்கள் செல்வந்தர்தான்..!
Ketu in 11th house
11-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்:
கேதுபகவான் பிறப்பினால் அசுரன் ஆவார். அவருடைய இளமைப்பெயர் ஸ்வர்பானு. பாட்டனார் பெயர் காசிப முனிவர், தந்தை விப்ரசித்து, தாய் சிம்சிகை.
கேதுவின் அதி தேவர் விநாயகர். விநாயகரை வழிபடுதல், சதுர்த்தி விரதம் இருத்தல் போன்றவை கேதுவால் உண்டாகக்கூடிய தீய பலன்களை குறைக்க உதவும் மற்றும் தோஷங்களும் விலகும்.
கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர், புகழ், கௌரவம் உயரும் அமைப்பு, ஆலய தரிசனங்கள், தெய்வீக பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். அதே பலமில்லாமல் இருந்தால் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைதான் வரும்.
லக்னத்திற்கு 11-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் நல்ல நோக்கங்களை உடையவராக இருப்பார்கள்.
ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும். இவை இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
11ல் கேது இருந்தால் என்ன பலன்?..
செல்வச்சேர்க்கை உடையவர்கள்.
கல்வி வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
கீர்த்தி உடையவர்கள்.
சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மகிழ்ச்சி உடையவர்கள்.
உடல் பலம் உடையவர்கள்.
செல்வாக்கு உடையவர்கள்.
காது தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.
பெண் குழந்தைகள் அதிகம் உடையவர்கள்.
பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.