குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும்.. கருங்காலி கட்டை.! - Seithipunal
Seithipunal


கருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. மேலும், தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது.

கருங்காலி இருக்கும் இடத்தை சுற்றிலும் நேர்மறை சக்திகளை அதிகப்படுத்துகிறது. வீட்டில் கருங்காலி கட்டை, பொருட்கள் வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.

கண் திருஷ்டி போக்கிடும்

காரிய தடை நீக்கிடும்

தீய சக்திகளை அகற்றிடும்

இறை சக்தியை அதிகரிக்கும்

ஆரோக்கியம் மேம்படும்

செவ்வாயின் பாதிப்புகள் அகல...

ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர்வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. எனவே, செவ்வாய் பார்வை குறைவாக இருப்பவர்கள் கருங்காலியால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதன் மூலம் செவ்வாயின் நல்ல கதிர்கள் மட்டும் அதிகப்படியாக கருங்காலியால் ஈர்க்கப்படும். இதன்மூலம் பாதிப்புகள் அகலும் என்பது நம்பிக்கை.

கருங்காலி கட்டை :

குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை.

அமாவாசை முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும். அமாவாசை தினத்தில், கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டு முன்னோர்களின் ஆசியையும், குலதெய்வத்தின் அருளையும் பெற்றிடுங்கள்.

பூஜை செய்யும் முறை :

அதீத சக்தி பெற்ற கருங்காலி கட்டை ஒன்றை வீட்டில் வைத்து பசும்பாலால் சுத்தம் செய்து, கட்டையின் மேற்புறத்தில் சந்தனம், குங்குமம் மூன்று முறை அருகருகே இட்டு கொள்ள வேண்டும்.

அதன்பின் நாணயம் மூன்றை எடுத்து குங்குமம் இட்ட இடத்தில் வைத்து, மலர் மாலை ஒன்றை சாற்றி பின்னர் தூப, தீபம் காட்டும் போது குலதெய்வத்தின் மகிமை கருங்காலி கட்டையினுள் இறங்கும்.

கருங்காலி கட்டையை ஒருவர் சரியாக வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் கிட்டும். நீங்கள் எந்த பிரச்சனைகளில் இருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய வழியை குலதெய்வம் நிச்சயம் காட்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வேண்டிய வரம் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karungali kattai for kuladeivam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->