கரிநாட்களில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா? - Seithipunal
Seithipunal


நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்காட்டியிலும், பஞ்சாங்கத்திலும் சில நாட்கள் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும் கரிநாட்களில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறுவர். அதில் உள்ள காரணம் நம்மில் பலருக்கு தெரியாது. நாமும் அதை தொடர்ந்து நடைமுறையில் பின்பற்றி வருகிறோம்.

கரிநாள் என்றால் என்ன? கரிநாட்களில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா? ஆகியவற்றை பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

கரிநாள் என்றால் என்ன?

வானியல் அடிப்படையில் தான் சுப நாட்கள், அசுப நாட்கள் கணக்கிடப்படுகிறது. சூரியனை அடிப்படையாக வைத்து தான் கரிநாள் கணக்கிடப்படுகிறது. கரிநாள் என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் ஆகும்.

குறிப்பிட்ட தமிழ் மாத தேதிகளில் சூரிய கதிர்வீச்சு பூமிக்கு போதுமானதை விட அதிகமாக வரும். அந்த நாட்களை கரிநாட்கள் என்று கணித்து கூறுகின்றனர்.

அதே போல கரிநாளில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்வதில்லை. குறிப்பாக திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உட்பட எந்த நல்ல காரியங்களையும் கரிநாளில் செய்வதில்லை.

ஏன் கரிநாளில் திருமணம் செய்யக்கூடாது?

நம் முன்னோர்கள் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்யமாட்டார்கள். பெரும்பாலும் அறிவியல் கலந்த உண்மை அடங்கி இருக்கும்.

கரிநாட்களில் சூரிய கதிர் வீச்சு பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அவை நம் உடம்பில் உள்ள அனைத்து சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை சராசரியை விட சற்று அதிகமாக தூண்ட வைக்கும்.

எனவே, இந்த நாட்களில் நாம் உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல், யோசிக்காமல் முடிவெடுத்தல், குழப்பம் போன்றவற்றை செய்ய நேரிடும். எனவே தான் கரி நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யவேண்டாம் என்கின்றனர்.

மேலும் அன்றைய தினங்களில் அதிக வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சூரிய கதிர்வீச்சு உடல் உறுப்புகளை பாதிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kari naal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->