நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில், இவ்வளவு இருக்கா.?!  - Seithipunal
Seithipunal


சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார். அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம். 

பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர். கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள்.

குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்தவொரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இதுதான்.

எனவே, ஜென்ம நட்சத்திர வழிபாட்டு வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டு விடாதீர்கள். 

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 

உங்கள் ஜாதகத்தின் மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள் :

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. 

தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. 

வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். 

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்திற்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jenma natchathira palankal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->