இன்றைய தினப்பலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான நாள்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலுக்கேற்ப ஆதாயம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

ரிஷபம்:

குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்:

தற்பெருமை சிந்தனைகளை குறைத்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

கடகம்:

குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படும்.

சிம்மம்:

கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விதண்டாவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

கன்னி:

சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாகனங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் புதிய சிந்தனைகளும், ஆசைகளும் மலரும். எதிர்பாலின மக்களின் மீதான கண்ணோட்டங்களில் சிறு மாற்றங்கள் உண்டாகும்.

துலாம்:

திருத்தலம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

விருச்சகம்:

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சகோதரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும்.

தனுசு:

நெருங்கிய உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதியும், தெளிவும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் மற்றும் தொடர்புகளின் மூலம் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும்.

மகரம்:

உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். பொது அறிவு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். பொது வாழ்வு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

கும்பம்:

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் தனவரவுகள் குறையும்.

மீனம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழ்நிலைகள் காணப்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பொருட்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 19 rasi palan


கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா?
Seithipunal