ஐயப்ப பக்தர்கள்.. கருமை, கருநீலம் நிறங்களில் உடை அணிவது ஏன்? - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் துவங்கியதும், ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள்.

ஐயப்பன் கலியுக வரதன், கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

ஐயப்பனின் சிறப்புகள் :

ஐயப்பன் சபரிமலையை ஒட்டிய காடுகளில் தான் மகிஷாசுரனின் தங்கையாகிய மகிஷியை வதம் செய்தார்.

பதினெட்டு எனும் எண் ஐயப்பனுக்கு விசேஷமானது என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு தெரியுமா? சபரிமலையை சுற்றிலும் 18 காடுகள் இருக்கின்றன.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கவர்ந்திழுப்பது சபரிமலையும், அதில் வீற்றிருக்கும் ஐயப்பனும் தான்.

ஐயப்ப பக்தர்கள், சனிபகவானின் ஈசனாகிய ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பக்தர்கள். சனீஸ்வரனை மகிழ்விக்கும் விதமாக கருமை, கருநீலம் ஆகிய நிறங்களிலேயே உடை அணிகின்றனர்.

சபரிமலையில் ஐயனைத் தரிசிக்க ஆண்களுக்கு வயது வரம்பு இல்லை.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை துவங்கும் முன் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். விரத காலம் முழுவதும் தங்கள் குருசாமியால் அணிவிக்க பெற்ற துளசி மாலையையோ, ருத்ராட்ச மாலையையோ கழுத்தில் தவறாது அணிந்திருக்க வேண்டும்.

ஐயப்பன் கருவறை தரிசனம் செய்யும்போது பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த நெய்யை சமர்ப்பிக்கிறார்கள். இந்த நெய்யை அளித்து மெய்யை பெற வேண்டும், தங்களுக்கு ஆத்மானுபவம் கிட்ட வேண்டும் என்ற வேண்டுதலே இதன் அடிப்படை நோக்கம்.

இருமுடி நிறங்கள் :

முதல்முறை விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வருவோர் கன்னிசாமிகள். இவர்கள் செந்நிறத்தில் இருமுடியணிவார்கள்.

கன்னிசாமிகள் தவிர்த்து இதர ஐயப்ப பக்தர்கள் கருப்பு வண்ணத்தினாலான இருமுடியையோ அல்லது நீல வண்ணத்தினாலான இருமுடியையோ பயன்படுத்தி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

ஐயப்பனின் மூல மந்திரம் :

ஓம்! க்ரும் நம பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய கடவுள் ஐயப்பன் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iyyappan special 6


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->