ஐப்பசி பௌர்ணமி... அன்னாபிஷேகம்... நீங்கள் கிரிவலம் செல்லும் முறை சரியா?! - Seithipunal
Seithipunal


ஐப்பசி மாத பௌர்ணமியும், கிரிவலமும்..:

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

அன்னாபிஷேகம் :

சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

கிரிவலம் :

ஐப்பசி மாத பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர்ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது.

கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.

ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.

வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.

மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.

மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.

கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சமநிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.

மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.

தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு. 

கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.

கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.

கிரிவலத்திற்கு உகந்த நேரம் :

மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொண்டால் உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ippasi annabishegam girivalam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->