இருளில் இருந்த கண்களுக்கு வெளிச்சம் புலப்படும்போது ஆசைகளும், லட்சியங்களும் தோன்ற துவங்குகின்றன. அவ்வாறு தோன்றும் லட்சியங்களில் வெற்றி அடைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பம் ஆகும். ஆனால், முயற்சி செய்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.
இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறு அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்தும்போது அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. இனி ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகள் மற்றும் சின்னத்தை பற்றி பார்ப்போம்.
நட்சத்திர குறியீடுகள் :
1. அஸ்வினி - குதிரைத்தலை அல்லது குதிரை உருவம்
2. பரணி - மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்
3. கிருத்திகை - கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை
4. ரோகிணி - தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்
5. மிருகசீரிஷம் - மான் தலை மற்றும் தேங்காயின் கண்
6. திருவாதிரை - மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி
7. புனர்பூசம் - வில் மற்றும் அம்புக்கூடு
8. பூசம் - தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9. ஆயில்யம் - சர்ப்பம் மற்றும் அம்மி
10. மகம் - வீடு, பல்லக்கு மற்றும் நுகம்
11. பூரம் - கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை
12. உத்திரம் - கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13. ஹஸ்தம் - கைகள் அல்லது உள்ளங்கை
14. சித்திரை - முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்
15. சுவாதி - புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்
16. விசாகம் - முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்
17. அனுஷம் - குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு
18. கேட்டை - குடை, குண்டலம் மற்றும் ஈட்டி
19. மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை
20. பூராடம் - விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்
21. உத்திராடம் - யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்
22. திருவோணம் - காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு
23. அவிட்டம் - மிருதங்கம் மற்றும் உடுக்கை
24. சதயம் - பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்
25. பூரட்டாதி - கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்
26. உத்திரட்டாதி - கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்
27. ரேவதி - மீன் மற்றும் மத்தளம்