ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.! - Seithipunal
Seithipunal


பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் இன்று அதிகாலை 4.45 மணியளவில் திறக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நேற்று இரவு முதல் ரங்கநாதர் கோவிலில் திரண்டிருந்த நிலையில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பக்தி பரவசத்துடன் ரெங்கா ரெங்கா என்று இறைவனின் திருநாமத்தை சொல்லி கோஷமிட்டனர். 

சொர்க்கவாசல் வைபவத்தையொட்டி பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசல் கடந்த நம்பெருமாள், வலம் வந்து ஆயிரம் கால் மண்டப மணல் வெளியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heaven Gate opened in Srirangam Aranganathar Swami Temple


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->