வாழ்வில் வளம் சேர்க்கும் குரு பகவான் வழிபாடு..!
Guru Sloken
“ குருபார்க்க கோடி நன்மை என்பது பழமொழி “ குருபகவானின் பார்வைபடும் ராசிகாரர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவர் என்பது ஜோதிடர் வாக்கு. குருபகாவான் படத்தை பூஜை அறையில் வைத்து சந்தனம், குங்குமமிட்டு கொண்டைக் கடலை மாலை அணிவித்துக் கொள்ளுங்கள்.
பூஜை அறையில் பெரிய மண் அகலை வைத்து அதில், 16 16 திரி இட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். குருஸ்லோகத்தை சொல்லி பூஜித்து வர வேண்டும்.
குரு சுலோகம்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.