ஈரோடு: ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. இதில் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், சிலைகள் புதுப்பிக்கும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 31-ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதன் பின்னர், ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும், பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணியளவில் 8-ம்  கால யாக பூஜை நடைபெற்றது. மேலும், விமான ராஜ கோபுரங்களுக்கு, பரிவார மூர்த்தங்களுக்கும், கபாலீஸ்வரர் சுவாமிக்கும் புனித நீர் கலசத்தில் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை காண, ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மேலும், இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை மகா அபிஷேகம், தீபாராதனை, கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Iswaran temple Kumbabhishekam performed today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->