தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க, புத்தாடை அணிய சரியான நேரம் எது தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் செல்வ வளம் மென்மேலும் வளரும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நேரம்

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

தீபாவளி நாளில் புத்தாடை அணிவது ஏன்?

மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளை அகற்றி இந்த நாள் முதல், மனிதன் புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக தீபாவளி நாளில் நாம் புத்தாடை அணிந்து கொள்கிறோம்.

புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்

காலை 6:15 மணி முதல் 7.15 மணி வரை
பகல் 12.15 மணி முதல் 2.15 மணி வரை

தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது ஏன்?

நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள் இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.

தீபாவளி நாளில் இனிப்பு பகிர்வது ஏன்?

தீபாவளி நாளில் இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். இதற்கு காரணம் எல்லோரும் இன்புற்று ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவே தீபாவளி நாளில் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்கின்றோம்.

தீபாவளியன்று ஏன் விளக்கேற்ற வேண்டும்?

வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்க விளக்கேற்ற வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி.

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை

இரவு 7.01 மணி முதல் 9.15 மணி வரை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali special oil bathing and new dress wear good time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->