பக்தர்களே! அதிக புகை விடும் வாகனங்களுக்கு தடை...! - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் 8000-க்கும் மேலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும், மலைக்கு வரும் சில வாகனங்கள் அதிக அளவு புகையை வெளியேற்றுகிறது. இதனால் காற்று மாசு அடைவதுடன் மக்கள் சுவாசிக்க அவதிப்படுகின்றனர்.

இதைத் தடுக்க திருப்பதி தேவஸ்தானம் அதிக அளவில் புகையை வெளியேற்றும் வாகனங்கள் மலைக்கு வர தடை வித்துள்ளனர். மேலும், இந்த வாகனங்களை கண்டறிந்து திருப்பி அனுப்ப திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

தேவஸ்தான அதிகாரிகள்:
அவ்வகையில் தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்ததாவது,"திருப்பதி மலைக்கு வரும் வாகனங்கள் புகை பரிசோதனை சான்றுகளை அலிபிரியிலுள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

புகை சான்று இல்லாத வாகனங்களை கண்டறிய அலிபிரியில் ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.ஆய்வு மையத்தில் பரிசோதனையின் போது 4.0 அளவை விட அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டு வருகிறது.வாகனங்களில் வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees Vehicles emitting excessive smoke are banned Tirupati Devasthanam officials


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->