தினம் ஒரு திருத்தலம் : சுயம்பு வடிவில் அம்மன்... விஷேசமான புற்று.!!
chinnamman temple
அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில் சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு எப்படி செல்வது :
கோவிலானது சைதாப்பேட்டையில் ஜெயராம் தெருவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சைதாப்பேட்டைக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பது சிறப்பு.
கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி மிகவும் விசேஷமானது.
நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர்.
கோயிலின் இடதுபுறம் பெரிய குளம் உள்ளது. அதில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவமும், தீமிதி திருவிழாவும் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வேறென்ன சிறப்பு :
சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக்கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகதோஷ பிரார்த்தனை தலமாக விளங்கும் கடம்பாடி சின்னம்மன் பல்வேறு தோஷங்களை நீக்குகிறாள்.
திருவிழாக்கள் :
ஆடி மாதம் வந்துவிட்டால் சின்னம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினமும் வந்தவண்ணம் இருப்பார்கள். அமாவாசைக்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது.
ஆடி மாதத்தில் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு வகையான வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
இந்த திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் அம்மனுக்கு விமர்சையாக நடைபெறும்.
பிரார்த்தனை :
அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன், மனைவிக்கிடையே இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
கோவிலில் வேப்ப மரமும், பனை மரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
அம்மை நோய் குணமடைய இங்கு வந்து சங்கு தீர்த்தம் சாப்பிட்டால் விரைவில் குணமடையும் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
நேர்த்திக்கடன்கள் :
பக்தர்கள், பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சாற்றியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல் அமோகமாய் இருக்கும்.