மலேசியாவை மிஞ்சிய சேலம்.! 145 அடி உயரத்தில் பிரமாண்டம்.!
big murugan statue in salem
மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 145 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலத்தில் நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளது அங்கு 140 அடி உயர முருகன் சிலை உள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்யாமல் செல்லமாட்டார்கள்.
இந்த நிலையில், சேலம்-ஆத்தூர் சாலையில் புத்திரகவுண்டபாளையத்தில் ஏற்கனவே முருகன் கோவில் உள்ளது இங்கு தற்போது 145 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டு வருகிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இந்த சிலையை வடிவமைத்து வருகிறார்கள். ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூரைச்சேர்ந்த முருக பக்தரான ஸ்ரீதரன் என்பவர் தான் இந்த பிரமாண்ட முருகன் சிலையை நிறுவி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த சிலை அமைக்கும் பணி 60 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
big murugan statue in salem