நமது வீட்டை 'சிறந்த' வீடாக மாற்றும் ''ஆன்மீக குறிப்புகள்'':
better home anmika thakavalkal
நமது இல்லத்தில் அமைதி செல்வம் இன்பம் போன்ற நல்ல விஷயங்கள் நிலைத்து நிற்க ஆன்மீக குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
* ஒருவருக்கு பணம் கொடுக்கும் பொழுது வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் யாராக இருந்தாலும் வாசற்படிக்கு உள்ளே அல்லது வெளியே இருக்க வேண்டும்.
* செவ்வாய்க்கிழமை பணம் கொடுக்கல்-வாங்கல் நடப்பது நல்லது. அப்படி செய்தால் பணம் சீக்கிரம் திரும்ப கிடைக்கும்.

* வாங்குபவராலும் பணத்தை திரும்ப கொடுக்க இயலும். வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றின் மீது உட்காரக்கூடாது.
* இரவு நேரங்களில் அடுத்தவர்களுக்கு பால், மோர், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது.
* எரியும் குத்து விளக்கை தானாக அமைய விடாமல் புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் சனியனே என்றும் எழவு என்றும் திட்டக்கூடாது.
* கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. உடுத்திக் கொண்டே கிழிந்த துணிகளை தைக்க கூடாது. தரையில் உப்பை சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது அரிசி தரையில் சிந்தாமல் இருத்தல் நல்லது.

* ஸ்ரீராம நாமம் உச்சரிக்கும் பொழுது அந்த இடத்திற்கு அனுமன் தேடி வந்து விடுவார். அதனால் அவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் ஸ்ரீமன் இடத்திற்கும் அனுமன் தேடி வந்து விடுவதால் வீட்டில் ஸ்ரீமன் நாராயணனின் பெருமை குறித்தும், அவரது பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் செல்வ செழிப்பு தானாக வந்துவிடும்.
* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். லக்ஷ்மிகு நெல்லி மரம் உரிய மரமாக உள்ளதால் மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அந்த இடத்தில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

* எந்தவித தீய சக்திகளையும் அண்ட விடாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பு தன்மை இல்லாமல் சுவையாக இருக்கும். சுமங்கலிகள் மஞ்சள் குங்குமம் கோலம் சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், திருவிழாக்கு, கண்ணாடி உள்ளங்கை தீபம் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவை.
* வீட்டின் முன்பு உள்ள துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்தால் வீட்டில் தெய்வீகம் நிறைந்திருக்கும். பசுக்களுக்கு பழம் வாங்கி கொடுத்தால் கோடி புண்ணியம் தேடி வரும் என்பார்கள். அதுபோல் பசுக்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுத்தால் குபேரன் குடி கொண்டிருப்பார்.
செல்வம் நிலைத்து நிற்க வீடுகளில் வெள்ளைப் புறாக்களை வளர்க்க வேண்டும். சங்கு, நெல்லிக்காய், பசு சுத்தமான ஆடைகள் போன்றவை வீட்டில் இருப்பது நல்லது.

* காலை எழுந்தவுடன் தங்களது உள்ளங்கை, பசு, கோவில் கோபுரம், இறைவனே திருவுருவப்படம் போன்றவற்றை பார்க்க வேண்டும். தினமும் வீட்டில் விளக்கேற்றுவது சிறப்பு. அதிலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பை அளிக்கும்.
* வீட்டுக்குள் வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் வழங்க வேண்டும் அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு வழங்கினால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

* உப்பு, அன்னம், நெய் போன்றவற்றை கையால் பரிமாறக்கூடாது. அப்படி கையால் பரிமாறப்பட்ட உப்பு, அன்னம், நெய் போன்றவை கோ மாமிசத்துக்கு சமம். பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாற கூடாது.
* அமாவாசை நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் நன்மை கூடும். இரவு நேரங்களில் வீட்டை பெருக்கினால் குப்பையை வெளியில் கொட்ட கூடாது.
English Summary
better home anmika thakavalkal