பெங்களூரு கிராமப்புறத்தில் பரபரப்பு! சாமி தரிசனத்துக்கு பின் அதிர்ச்சி…! - பிரசாதம் சாப்பிட்ட 60 பேருக்கு உடல்நல பாதிப்பு...!
Bengaluru rural area state shock after seeing Lord Shiva 60 people who ate offerings suffered health problems
கர்நாடகாவின் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நடைபெற்ற ராமநவமி விழா எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட நிலையில், 400-க்கும் மேற்பட்டோரில் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல குறைபாடுகள் தோன்றின.

இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மொத்தம் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் தேவனஹள்ளி முதன்மை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலானோர் நலம்பெற்று வீடு திரும்பியதாக பெங்களூரு கிராமப்புற மாவட்ட சுகாதார அதிகாரி லக்கா கிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மூத்த சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வழங்கப்பட்ட பிரசாத மாதிரிகளை சேகரித்து தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தனியாக விசாரணை நடத்தி வருவதால், ராமநவமி விழாவில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bengaluru rural area state shock after seeing Lord Shiva 60 people who ate offerings suffered health problems