ஆருத்ரா தரிசன விழா : நெல்லையப்பர் கோவிலில் திரளும் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். இந்தக் கோவிலில், கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.

இந்த விழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக நேற்று இரவு தாமிர சபை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய நிலையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனையும் நடைபெற்றது. இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக திரளான பக்தர்கள் விடிய, விடிய கோவிலின் வளாகத்தில் திரண்டிருந்தனர்.

இதேபோல், இன்று அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும், கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பார்த்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arudhra dhrisanam in nellaiyappar temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->