இன்னைக்கு வளையல் வாங்க மறந்திடாதீங்க.! ஆடிப்பூரம் சிறப்பு.!
adippooram special ammanukku vailayal kappu
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடலிற்கு நல்லது என்று கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுக்கிழமைகளில் அன்னையை வழிபட்டால் எல்லா நன்மைகளும் நமக்கு கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாளாகும். இத்தினம் ஆடிப்பூரம் என்று கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள்.
அம்மனுக்கு வளைகாப்பு :
உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும்.
ஆடிப்பூர தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது நன்மை மட்டுமின்றி புண்ணியத்தையும் தரும்.
English Summary
adippooram special ammanukku vailayal kappu