ஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டாம்..! இதை செய்யுங்கள் பெண்களே.! - Seithipunal
Seithipunal


பெண்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை ஆத்மார்த்தமாக வழிபட்டால் பலன் கிடைக்கும்.

அமாவாசையன்று நாம் செய்ய வேண்டியவை :

அமாவாசையன்று ஏழை குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப சாதமாகவோ, இட்லியாகவோ அன்னதானம் செய்யலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள்ளுருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும்.

அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்திற்கு பொருந்தாது.

தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்வது அவசியம்.

தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாற்ற வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலைவாழையிலை படையலிட்டு வணங்க வேண்டும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைத்துவிட்டு, தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாட்களில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

அன்று காகத்திற்கு சாதம் வைத்த பின்னரே நாம் உணவருந்த வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும்.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய இதைச் செய்ய வேண்டும். தந்தை இல்லாதவர்கள் மட்டும் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும்.

மற்றவர்கள் படையலிட்டு வழிபாடு செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டின் அருகிலுள்ள கோவிலில் தர்ப்பணம் செய்யலாம். பெண்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை ஆத்மார்த்தமாக வழிபட்டால் பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aan varusu illai enru kavalai vendam


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal