12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்... ஏன் எதற்காக?
12 year ones kumpapishekam
கோவில், கோபுரம், கலசம் :
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஊரில் உள்ள கோவில் கோபுரங்களை விட உயரமாக வேறு எந்த கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.
என்ன காரணம்?
கோவில் கோபுரங்கள் உயரமாகவும், அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் கலசங்களையும் பார்த்திருக்கிறோம். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மையை அறிவியலின் துணையுடன் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் தங்கம், வெள்ளி செம்பு(அ)ஐம்பொன்னால் செய்யப்பட்டு இருக்கும். மேலும், கலசங்களில் தானியங்களும் கொட்டப்படும்.
இந்த கலசங்களிலும், அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால், வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இன்றைக்கு கடைபிடிக்கப்பட்டு வரும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுவது வெறும் சம்பிரதாயமாக மட்டுமே நடக்கிறது.
காரணம் என்னவென்றால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறதாம். அதன்பின் அது செயல் இழந்துவிடுகிறதாம்.
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்?
இதை அறிந்து கொண்ட விஷயம் ஆச்சர்யம்தான். இன்றைக்கு திடீரென்று 3 அல்லது 4 நாட்கள் மழைப் பெய்வதைப் போன்று அந்த காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமாக உள்ள இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்" ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
சில கோவில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் பல மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன என்பது நாம் அறியப்படாத உண்மைகள்.
English Summary
12 year ones kumpapishekam