தன்னம்பிக்கையூட்டும் இன்றைய தின ராசிபலன்கள்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். வரவுகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். தாமதம் அகலும் நாள்.

மிதுனம்:

எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வியில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

கடகம்:

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். விவசாயம் தொடர்பான துறைகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

சிம்மம்:

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ஆதாயகரமான நாள்.

கன்னி:

நண்பர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

துலாம்:

உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

விருச்சிகம்:

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழப்பம் அகலும் நாள்.

தனுசு:

உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிந்தனைகள் மேம்படும் நாள்.

மகரம்:

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த துறைகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அமைதியான நாள்.

மீனம்:

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

02 apr rasipalan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->