புதிய அப்டேட்டை வெளியிட்ட வாட்ஸாப் நிறுவனம்.!! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பை உலகில் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.  ஆடியோ வீடியோ கால் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. இருப்பினும் வாட்ஸ் அப் நிறுவனம் புது புது அப்டேட்டுகளை கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஸ்கிரீன்ஷாட் என்னும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கிரீன் ஷாட் வசதி மூலம் வீடியோ கால் அழைப்பின் போது பயனர்கள் தங்களது செல்போனில் ஸ்கிரீனை  கொள்ள முடியும்.

பயனர்கள் செல்போனில் ஸ்கிரீன்ஷாட் வசதியை ஆன் செய்து விட்டால் மறுபக்கத்தில் இருக்கும் நபரால் உங்களது செல்போனில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களது செல்போனின் திரையில் பார்க்க முடியும்.

 இந்த புதிய சேவை வசதி மூலம் ஒருவர் மற்றொரு செல்போன் மற்றும் கணினியில் இருந்து கோப்புகள் மற்றும் படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் இணைந்து கலந்துரையாடலாம்.

 இந்த புதிய அப்டேட்டில் லேண்ட் ஸ்கேப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது ஆன்ட்ராய்டு ஐபோன் மற்றும் கணினி என்று படிப்படியாக இந்த அப்டேட் கொடுக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp company new update of screen sharing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->