வட மாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ.. பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு தடை.? - Seithipunal
Seithipunal


யூடியூபில் பரிதாபங்கள் என்ற சேனல் பொதுமக்களே மிகவும் பிரபலமானது. இந்த சேனலில் வெளியாகும் வீடியோக்கள் பொதுமக்கள் ரசிக்கும் படியாகவும் நகைச்சுவையாகவும் இருப்பதால் அதிக ரசிகர்களை பெற்றுள்ளது.

இந்த சேனலில் முக்கியமானவர்களான கோபி மற்றும் சுதாகருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வடக்கன் பரிதாபங்கள் என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

அந்த வீடியோவில் தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை வட மாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் படியும் காட்டி இருந்தனர்.

இந்த நிலையில் சமீப நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், வட மாநில தொழிலாளர்களை தவறாக காட்டியதால் கோபி மற்றும் சுதாகர் சேனலான பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vadakkan Parithapangal video controversy in social media


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->