கதிகலங்கும் ட்விட்டர் தளம்! திமுக வரலாற்றை வறுத்தெடுத்த தினகரன்! உச்சகட்ட கொந்தளிப்பில் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலின் அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரனை 420 என விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.  

"கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத்தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். 

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி!

லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.

லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?" 

என ஐந்து ட்விட்களை தனது பக்கத்தில் தினகரன் பதிவிட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த திமுக சமூக ஊடக பணியாளர்கள் தினகரனையும், அவருடைய குடும்பத்தினரையும் விளாசி வருகிறார்கள். அரசியல் சண்டைகள் மக்களுக்கான பணியில் இல்லாமல் இதுபோன்ற தனிநபர் சண்டையாவது தமிழக அரசியலையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. 

English Summary

TTV DHINAKARAN TWEET ABOUT DMK STALIN


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal