சாதனத்தை வேரறுக்க வந்த சிறுத்தை..!! திருமாவளவனின் வி.ஐ.பி தரிசன பரிந்துரை கடிதம் வைரல்..!!
Thirumavalavan recommend letter for Sabarimala temple devotee has gone viral
இந்துக்கள், இந்து கடவுள்கள் மற்றும் இந்து நம்பிக்கைகள் குறித்து மிகவும் இழிவாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளவர் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன். இவர் ஒரு மேடையில் ஹிந்து கடவுளான ஐயப்பனின் பிறப்பை பற்றி மிகவும் இழிவாக பேசி உள்ளார். இதனை இந்துக்களும், இந்து அமைப்பு ஆதரவாளர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர். திருமாவளவனின் இந்துக்கள் எதிரான கருத்துகளுக்கு அவ்வபோது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்துக்களின் அடிப்படைக் கொள்கையான சனாதனத்தை வேரறுக்காமல் ஓயமாட்டேன் என திருமாவளவன் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் சனாதனத்தை வேரறுக்க காத்திருக்கும் திருமாவளவன் தனது ஆதரவாளர் ஒருவருக்கு சபரிமலையில் விஐபி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிர்வாக கமிட்டிக்கு பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளார்.

அந்தகடிதத்தில் தனது ஆதரவாளரான குமரேசன் மற்றும் அவருடன் வரும் நான்கு நண்பர்களுக்கு வரும் டிச.16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் விஐபி தரிசன வரிசையில் ஐயப்பனை வணங்கிட பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பரிந்துரை கடிதம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் சனாதனத்தை வேரறுக்க வந்த சிறுத்தை என திருமாவளவனை விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Thirumavalavan recommend letter for Sabarimala temple devotee has gone viral