அப்பாவை பைலட் உடையில் கண்டதும் துள்ளி குதிக்கும் சிறுமி., இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


விமானத்தில் தனது தந்தை பைலட்டாக வந்ததை கண்டு சிறுமி ஒருவர்  மகிழ்ச்சியில் திளைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு பொதுவாக தந்தை தான் முதல் ஹூரோ அவர்களின் பிணைப்பு அழகானதாக இருக்கும். இப்படி இருக்க தான் செல்லும் விமானத்தில் தந்தையே பைலட்டாக வருவதை கண்டு சிறுமி ஒருவர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

ஷனையா மோதிகர் என்ற அந்த சிறுமி தனது தாயுடன் டெல்லி செல்வதற்காக விமானத்தில் தனது தாயுடன் சென்றுள்ளார்.இந்நிலையில், அவர்கள் சென்ற விமானத்தில் அந்த சிறுமியின் தந்தை பைலட்டாக இருந்துள்ளார்.

பைலட் உடையில் தனது தந்தையை கண்ட அந்த சிறுமி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். இந்த வீடியோவை அவரது தாய் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The little girl who jumps for joy because her father came as a pilot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal