'ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று சிம்பொனி வாசிக்கிறது'...! - ரஜினிகாந்த்
The hands that played the harmonium today play the symphony Rajinikanth
இசைஞானி இளையராஜா இதுவரை திரைத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவரது பாதையில் முதன்முறையாக நேரடியாக சிம்போனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதற்காக இளையராஜாவை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
இந்நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள இசைஞானி இளையராஜாவிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, " பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுக்கள்... " எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பக்கத்தை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.
English Summary
The hands that played the harmonium today play the symphony Rajinikanth