மீண்டும் தனது செக்ஸி படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமெடி நடிகை.!! படு மோசமாக ஏன் நடந்து கொள்கிறீர்கள்..? கொதிக்கும் நெட்டிசன்கள்.!!
செக்ஸி படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமெடி நடிகை
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் நடிகை வித்யுலேகா. இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'நீ தானே என் பொன் வசந்தம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு, வீரம், ஜில்லா போன்ற படங்களில் நடித்தார். உடல் எடை பிரச்சனை காரணமாக, சில நாட்களாக சினிமாவில் நடிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், சிலநாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில், தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்போதே, நெட்டிசன்கள் அதனை விமர்சித்து பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில், மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை நடிகை வித்யுலேகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், காமெடி செய்யும் நடிகையாக இருந்தால்.., உங்களால் செக்ஸியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைப்பார்கள். இது தான் நான், என்னாலும் முடியும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உடம்பைக் காட்டினால்தான் அழகா..? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சிலர் இப்படி ஒரு அழக.., காமெடி கேரக்டருக்கு பயன் படுத்திட்டானுகளே... என்றும், இப்படி ஏன் மோசமாக நடந்துகொள்கிறீர்கள்..? என்றும் ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளனர்.