#JustForFun: மனமுடைந்த அணில், பப்பாளி பழத்தில் தலைவிட்டு தற்கொலை.. ட்விட்டர் சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. மேலும், மின் சேவைகள் தொடர்பான பிரச்சனையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டுக்கான காரணங்களாக கூறியதாவது, " கடந்த 1 வருடமாக மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதால், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், எதிர்பாராத விதமாக மின்தடைகள் ஏற்படுகிறது " என்று தெரிவித்து இருந்தார். 

இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நெட்டிசன்கள் தங்களை அணிலின் மனதின் குரலாக பாவித்து, அணிலின்  மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

மேலும், நேற்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய அணில், இறுதியில் தற்கொலை வரை சென்றுள்ள சோகமும் அரங்கேறியுள்ளதாக அணிலை வைத்து அமைச்சரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், மணலோடு விளையாடு, ஜன்னலோரம் குளிராடு, அணில் மேல பழியை தூக்கி போட்டோமே என்ற பாடலும் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு மீம் மற்றும் பாடலை பொறுமையாக பார்த்து சிரித்து மகிழுங்கள். இது உண்மையிலேயே Just For Fun தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Media Twitter Trend about Anil Balaji and Anil is Responsible for Power cut in TN


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->