மருமகன் அழுறதென்ன, அத்தை ஆறுதல் சொல்றதென்ன.. என்னதான் நடக்குது?.. ஒண்ணுமே புரியலையே..!! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்கள் வாயிலாக நமக்கு பல புதுமுகங்கள் அறிமுகம் கிடைத்திருக்கும். சிலர் தங்களின் நடிப்பு ஆற்றலால் நமது மனதில் நின்றிருப்பார்கள். பலரை நாம் அவர்களின் செயல்பாடுகளால் கழுவும் ஊற்றியிருப்போம். இப்படியாக பல முகங்கள் நமது இணைய வாழ்க்கையில் சந்தித்து வரும் நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 2 கே கப்புள்ஸ் தான் ட்ரெண்டிங்கில் பேசப்படும் விசயமாகியுள்ளது. 

பொதுவாக, 90 கிட்ஸ் ஆக இருக்கும் பலருக்கும் இன்றளவும் திருமணம் ஆகாமல் ஏங்கித்தவிக்கும் வேளையில், 80 கிட்ஸ் மனைவியுடன் இன்பமாக இருந்து வரும் வேளையில், 2 கே கிட்ஸ் தங்களது தோழிகள் அல்லது காதலிகள் (பதின் வயது காதல்) ஆகியோருடன் தங்களின் வாழ்நாட்களை இன்பமாக செலவழித்து வருகின்றனர். இவர்களின் இணையதள அடிமைகளாக இருக்கும் சிலர், தங்களின் வாழ்நாள் குறைகளை (அவர்களுக்கான ஏக்கங்கள்) இன்ஸ்ட்டா மற்றும் டாகா டாக் போன்ற செயலிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறாக தனது வாழ்நாட்களின் முயற்சியாக நடிப்பை வெளிப்படுத்திய குட்டி வடிவேலு என்ற சஞ்சய்க்கும் - இன்ஸ்டாவில் அறிமுகம் ஆகிய தோழியான சோபிக்கும் காதல் மலர்ந்ததாகவும், இந்த காதலின் உச்சமாக குட்டி வடிவேலுவின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட, அவர் அழுததற்கு தோழி ஆறுதல் சொல்ல, தோழியின் அழுகைக்கு சஞ்சய் ஆறுதல் சொல்ல, இருவருக்கும் அத்தை - மருமகள் என இருதரப்பு பெற்றோரும் ஆறுதல் சொல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

இது குறித்த விடியோவை காணுகையில், சஞ்சய் - ஷோபி காதல் வயப்பட்டு இருப்பதை போலவும், ஷோபியின் தாயார் மருமகனுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும், எதிர்தரப்பில் சஞ்சய்யின் தாயார் தனது மருமகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் உள்ளது. மேலும், இருவரில் ஷோபி சற்று வயது மூத்தவர் போல (சச்சினை விட அவரின் மனைவி வயது அதிகம்) போலவும் தெரியவருகிறது. 

இவர்களின் காதல் அலப்பறைகள் விடியோக்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், சில மீம் கிரியேட்டர்ஸ் தங்களின் கை வண்ணத்தை அந்த விடீயோக்களில் காண்பித்து சிலர் இருவரின் காதலை பாராட்டும் விதமாகவும், சிலர் இவர்களின் காதலை ட்ரோல் செய்யும் விதமாகவும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதனைக்கண்ட ஷோபி உங்களுக்கு பிடித்திருந்தால் பாலோ செய்யுங்கள், ஏன் ட்ரோல் செய்கிறீர்கள்? என தனது கேள்விகளையும் முன்வைக்கிறார். 

இன்னும் சிலர் படிக்கிற வயதில் காதல் தேவையா? இருவருக்கும், உங்களின் பெற்றோர் ஆதரவளிப்பது எப்படி உள்ளது? என்றும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மற்றொரு சிலர் இருவருக்கும் காதல் வயப்பட்டு இருந்தால் தற்போதையை படிக்கும் வயதில் படிப்பின் மீது நாட்டம் செலுத்துங்கள், படித்த பின்னர் உங்களின் வாழ்க்கையை பெற்றோரின் சம்மதத்துடன் தொடங்குங்கள் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்த வீடியோ மட்டுமல்ல, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணரவும் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விடீயோவையும் உங்களுக்கான பாடமாக எடுத்து அல்லது அதனை வைத்து நீங்கள் நலமுடன், யாரின் உழைப்பையும் சுரண்டாமல் பணியாற்றி வாழ்க்கையில் உயர்ந்தால் போதுமானது என்பதை மனதில் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு அல்லது சிறுவனுக்கு கிடைத்தது எனக்கு கிடைக்காதா? என போட்டி மற்றும் இழுக்கான மனப்பான்மையுடன் யாரும், யாரையும் வற்புறுத்தாதீர்கள் அல்லது பிற தீங்கான செயலை செய்யாதீர்கள், அது நாளை உங்களுக்கும் நடக்கும். 

மேற்கூறியுள்ள வீடியோவில் உள்ள காதல் உண்மையோ, பொய்யோ. அது அவர்களின் பிரச்சனை. தேவையில்லாமல் அவர்களின் எதிர்காலத்தில் ஏதும் பிரச்சனை ஏற்படாமல் இருந்தால் சரி தான். 

வாய்பேச தெரிந்த பிள்ளை தான் பிழைக்கும். 

பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறேன். 

நல்லதே நினை., நல்லதை செய். 

நீ விதைத்த வினையை நீ அறுப்பாய்., அல்லது உனக்காக வருபவன்/வருபவள் அறுக்கும் போது அவ்வலி மரணத்தை விட கொடுமையானது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media Trending about 2K Couple Sanjay and Sobi Instagram KuttyVadivelu Insta Id Kuttyvadivelu


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal