#வீடியோ: உரிமையாளர் இல்லாமல் தனது பணியை தானே செய்யும் காளை.. வியப்பூட்டும் காணொளி.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் நமக்கு தெரியாத விஷயமே கிடையாது. ஏனெனில் உலகின் எந்த மூலையில் எந்த பிரச்சனை நடந்தாலும் அது குறித்த விபரம் முதலாக நமக்கு கிடைத்துவிடும். இணையத்தில் பல வீடியோக்கள் உலாவி வரும் நிலையில், சில விடியோக்கள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்தும். 

அந்த வகையில், வண்டிக்காளை ஒன்று உரிமையாளர் இல்லாமலேயே வண்டியின் தடியை தூக்கி தனது கழுத்தில் போட்டுகொண்டு, தனது பயணத்தை துவங்க ஆரம்பிக்கிறது. மேலும், மிகவும் எளிதாக மாடு புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த வீடியோ காட்சியை ஷாகிப் சிங் என்பவர் பகிர்ந்துள்ள நிலையில், இவர் மேற்கு டெல்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்த வீடியோ காட்சி சுமார் 12 வினாடிகள் மட்டுமே ஓடும் நிலையில், இது பெரும் வைரலாகியுள்ளது. 

இதில் கருத்து தெரிவித்துள்ள பலரும் புத்திசாலித்தனமான காளை என்றும், ஆச்சரியமான காளை என்றும், மனிதர்களை விட சிறந்த காளை என்றும், காளை தனது பணியை நன்கு உணர்ந்து செயல்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Media Trend Video about Bull Clever


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->