கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வி.சி.க.. உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா?... கொந்தளிக்கும் இளைஞர்கள்..!! - Seithipunal
Seithipunal


இன்றைய உலகில் தினமும் மக்கள் தங்களின் வெளிப்பாடுகளை பல்வேறு வகையான முறைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு வெளிப்பாடாக ஓவியம் வரைந்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிகழ்வும் அதிகளவு இருக்கிறது. அந்த வகையில், ஓவியம் மூலமாக நமக்கு பிடித்த நபர்களை அல்லது பிடிக்காத நபர்களை அல்லது ஒரு கருத்து சொல்ல முற்படும் பட்சத்தில், அதற்கான ஓவியத்தைப் ஓவியர் வரைந்து கருத்துக்களை பகிரும் நிகழ்வு நடந்து வருகிறது. 

இதில் பெரும்பாலானவை நல்ல விதமான கருத்துக்களை பெற்றாலும், சிலது விமர்சனங்களும், பல தடை செய்யப்படும் வகையிலும் இருக்கும். தற்போது உள்ள தமிழகத்தை பொருத்த வரையில், கார்ட்டூன்கள் என்பது பெரும் பிரச்சனையை கிளப்பும் விதமாகவும் சில நேரத்தில் அமைந்திருக்கிறது. கார்ட்டூன்கள் குறித்து அவதூறாக ஏதேனும் பதிவு செய்தால், அதனை பார்த்து ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதனை பார்த்து சிரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கார்ட்டூன்களுக்கு கருத்து சுதந்திரத்தை கழுத்தை நெரிக்க இயலாது என்று மகாராஷ்டிரா உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு தொடுத்த நபர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர். 

கார்டூன்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தலைவர்களில் உலக அளவிலான தலைவர்கள் முதல், உள்ளூர் தலைவர்கள் வரை அனைவருமே பெரும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் இந்த கார்ட்டூன்கள் மூலமாக சந்தித்தது உண்டு. இந்தியாவின் பிரதமர், தமிழகத்தின் முதல்வர், பிற அரசியல் கட்சியைச் சார்ந்த நபர்கள் என்று கார்ட்டூன்கள் மூலமாக விமர்சனம் செய்யப்படாத நபர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பல கார்ட்டூன்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் போன்று நீதித்துறையில் இருக்கும் நீதிபதிகளையும் கார்ட்டூன்கள் மிகச் சாதாரணமாக அசிங்கப்படுத்தி இருக்கும் சம்பவமும் இங்கு நடந்துள்ளது. 

இவ்வாறாக பல முக்கிய அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நபர்கள் கார்ட்டூனை பார்த்து, சிரித்துக்கொண்டு செல்லும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், தங்களை சார்ந்த ஒரு நபர் பாதிக்கப்பட்டாலோ அல்லது விமர்சனப்படுத்தப்பட்டாலோ இந்திய அளவிலான மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பல வார்த்தைகளை பேசி கலவரத்தை தூண்டும் நபர்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் கலவரத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்று கூறுவார்கள்.

கலவரத்திற்கு ஒரு தரப்பினர் தான் காரணம் என்று அப்பட்டமாக அப்பாவி பொது மக்களின் மீது அல்லது அப்பாவி மற்றொரு தரப்பினர் மீது வழக்குகளைப் பதிய வைத்து அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்பு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் ஊரில் அராஜகம், அட்டூழியம், ரவுடியிசம் செய்து வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு குழுவும், இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு சட்டமும், இவர்களுக்கு பாதுகாப்பளிக்க வழக்கறிஞர் அணியும், அதில் அங்கீகாரம் பெறாத பல வழக்கறிஞர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இணையதளத்தில் ஒரு கார்ட்டூன் வைரலாகி வந்தது. இது குறித்த கார்ட்டூன் திருமாவளவன் ஒரு பாத காலணியை நக்குவது போல் அமைந்திருந்தது. இந்த புகைப்படம் இணையதளத்தில் தொடர்ந்து வைரலாகவே, இந்த கார்ட்டூனை வரைந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், திருமாவளவனின் நேரடி கவனிப்பின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவனை பொறுத்தவரையில் இது போன்ற ஒரு கார்ட்டூன் அவருக்கு புதிதாக இருக்காது என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்த விஷயம். 

ஏனெனில் மாற்று கட்சியினர் அல்லது இவர் பழி சுமத்த நினைக்கும் சமூகத்தினரை, அந்த சமூகத்தை சேர்ந்த தலைவரை இவர்களது தரப்பினர் எவ்வளவு கீழ்தரமான புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன் கொண்டு வர்ணித்து வந்தார்கள் என்பது திருமாவளவனிற்கு அறியாத ஒன்றும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நபர்கள் செய்த வெட்கக்கேடான செயல் பல பெண்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது இன்றளவும் மறையாத வடுவாக பலரின் நெஞ்சில் இருக்கிறது என்பது நினைவுகூறத்தக்கது.

இதனைப் போன்று தமிழக முதல்வர் எவ்வளவு கேவலமாக கொச்சைப் படுத்தப்பட்டு உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இது குறித்த கார்ட்டூன்கள் இணையதளத்தில் தொடர்ந்து இரு தரப்பிலும் உலா வந்தாலும், தன்னை பற்றி ஒரு புகைப்படம் வந்ததும் ஆவேசப்பட்டு அவர்களை பழிவாங்கும் நோக்கில் அல்லது பிற செயல்களில் எந்த அரசியல் தலைவரும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டதாக தெரியவில்லை. வர்மா கார்ட்டூனிஸ்ட் என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் இருந்து வெளியான பதிவுகளின் அடிப்படையில் ராவணன் என்ற சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பல அரசியல் பிரமுகர்கள், சமூக தலைவர்கள், முதல்வர்கள் என கார்ட்டூனால் கேளிக்கையுடன் விமர்சனம் செய்யப்பட்ட பலரும் அமைதியாக இருக்கும் நிலையில், கார்ட்டூனை ரசிக்கத் தெரியாமல் நடவடிக்கை எடுக்க வைத்த உங்களுக்கு கார்ட்டூனை ரசிக்க தெரியாதா? என்றும், உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா... என்பது போல இருக்கிறது என்றும் இணைய தளத்தில் பல விஷயங்கள் இன்றளவில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரகுமாரை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்போது சர்ச்சைக்குள்ளான பதிவும், திமுக தயாநிதி மாறன் பேசிய பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்க இயலாது பின்வாங்கி, மக்களுக்காக பதிவு செய்யப்பட்டு, தற்போது கைது வரை கொண்டு சேர்த்து இருப்பதாக இணையதள நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media trend about VCK Thirumavalavan cartoon image issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal