இந்துவுக்கு ஒரு நீதி?.. கிருத்துவருக்கு ஒரு நீதியா?.. திமுகவை தொடர்ந்து அதிமுகவும் சாதி மத அரசியல்?..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில், கடந்த பிப்ரவரி மாதம் ராமலிங்கம் என்பவர் மத மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி 4 இஸ்லாமியர்கள் ராமலிங்கத்தை வெட்டி படுகொலை செய்தனர். 

ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரணையை தமிழக காவல்துறையினர் நடத்தி வந்தது, இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தன்வசம் எடுத்துக் கொண்டது. இதுவரை இந்த வழக்கில் ஏற்கனவே காவல்துறையினரால் 11 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 6 பேரை தேடும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டனர். 

இந்த விஷயத்தில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட இராமலிங்கத்தின் குடுமப்த்தினருக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை. மேலும், ராமலிங்கத்தின் கொலைக்கு நீதி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியும், இந்து அமைப்புகள் போராட்டத்தை கையில் எடுத்தது. இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் வடமாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர் என்ற காரணத்தால், அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில், இறந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் சமூகம் மற்றும் வணிக கட்டமைப்பில் கோலோச்சி இருக்கும் சமூகம் என்பதாலும், சிறிய அளவிலான எதிர்ப்பின் மூலமாகவும் நீதியை பெற்றுள்ளதாக நிவாரணம் மற்றும் அரசு பணிகளை பெற தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுபோன்று ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசு என்பது எந்த விதமான பாகுபாடும் இன்றி செயல்பட்டால் மட்டுமே அணைத்து தரப்பு வாக்குகளையும் பெற்று, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகளை செய்ய இயலும், பாகுபாடு பார்த்து செயல்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமே விளைவிக்கும். தற்போது ராமலிங்கத்தின் மறைவிற்கும் நீதிகேட்டு இணையத்தில் குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. இனியாவது ராமலிங்கத்தின் கொலைக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பத்தினர் இருக்கின்றனர்.

 

வடதமிழகத்தில் நடந்தால் மவுனம்.. தென்தமிழகம் என்றால் போர்க்கொடி.. சாதி பார்த்து கொடி பிடிக்கும் திமுக.!!

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media trend about Justice for Ramalingam when Murder by Jihadis


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->