இன்ஸ்டாவில் ஸ்மிரிதி மந்தனா வெளியிட்ட புகைப்படம்.! அடடே கைல என்ன..? வாழ்த்தும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அதில் டிரெயில்ப்ளேசர்ஸ் அணியும், சூப்பர்நோவா அணியும் மோதியது. முதலில் விளையாடிய டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 118 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சூப்பர்நோவா அணி கடைசி ஓவர் வரை போராடியது. இருப்பினும் வெற்றியை எட்டவில்லை. 

டிரெயில் பிளேசர்ஸ் அணியின் திறமையான பந்து வீச்சால் சூப்பர்நோவா அணி தோல்வியை தழுவியது. முதல் முறையாக மந்தனா தலைமையிலான டிரெயில்ப்ளேசர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் சூப்பர்நோவா அணி பேட்டிங் செய்கையில் இரண்டாவது ஓவரில் ஜெமின்னா பவுண்டரி நோக்கி பந்தை அடித்தார்.

பீல்டிங்கில் இருந்த நட்டகன் சந்தம் பந்து பவுண்டரி லைனில் நெருங்கிய பொழுது பாய்ந்து பந்தை பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்து பயங்கரமாக அடிபட்டார். இந்த பில்டிங் பலரையும் மெய் சிலிர்க்க செய்தது. இதன் காரணமாக இரட்டை ரன்கள் தடுக்கப்பட்டது. பீல்டிங்கை கண்டு வியந்த பலரும், அவரது கழுத்தில் ஏதாவது பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று கவலை கொண்டனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கழுத்துவலி குறித்த கேட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடைய கழுத்தில் தற்பொழுது வலி இல்லை என்று கூறி அவர்களை ஆறுதல் படுத்தினார். 

இந்நிலையில் தற்போது, டிரெயில்ப்ளேசர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோப்பையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கின்றார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன. 

View this post on Instagram

The first ones always special 🙃

A post shared by Smriti Mandhana (@smriti_mandhana) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

smiriti mandhana instagram victory photo 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->