இந்திய அளவில் ட்ரெண்டாகும் #SenthilBalaji ஹேஷ்டேக்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது இதுவே முதல் முறை.

இன்று காலை முதல் தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெறும் வருமானவரி துறை சோதனை தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் ஹைலைட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் #SenthilBalaji என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

நிமிடத்திற்கு நிமிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனை குறித்தான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால் இந்திய அளவில் செந்தில் பாலாஜி (#SenthilBalaji) ட்ரெண்டிங்கில் உள்ளார். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்த அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SenthilBalaji hastag trend in India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->