அதிர்ச்சி வீடியோ! மாலில் அசால்ட்டா ஐஸ்கிரீம் சாப்பிடும் எலிகள்...! அதிர்ச்சியில் கஸ்டமர்ஸ்...!
Rats eating ice cream mall Customers shock
நாள்தோறும் இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதில் சில நகைச்சுவையாகவும், சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். அவ்வகையில் பகிரப்பட்ட வீடியோ நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதா...? இல்லையா...? என்பதை நமது பார்வையில் உள்ளது.

இந்த வீடியோ மும்பையிலுள்ள சீவூட்ஸ் நெக்சஸ் மாலில் அமைந்துள்ள 7-Eleven என்ற கடையின் சமையலறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.அந்த வீடியோவில்," சமையலறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு எலி காபி தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் இருந்தும், மற்றொரு எலி ஐஸ்கிரீம் கூம்பை மெல்லுவதையும் காட்டுகிறது".
இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், "ஐயோ! இதைப் பகிர்ந்ததற்கு நன்றி. நான் மீண்டும் அந்த விற்பனை நிலையத்திற்கு வரமாட்டேன். நீங்கள் அந்த வீடியோவை கூகுள் மேப்பிலும் பதிவேற்ற வேண்டும் "என்று பதிவிட்டுள்ளார். மேலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து இதுவரை 7-Eleven நிறுவனம் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.
English Summary
Rats eating ice cream mall Customers shock