பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண்.! பிரபலமானதும் இவ்வளவு தலைகனமா? வீடியோ வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்குவங்க மாநிலத்திலுள்ள ரனகத் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ராணு மோண்டல் என்ற பெண்  பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் பாடலை பாடினார் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.  

இதையடுத்து, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாடி புகழ் பெற்றார். அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார். இதனைதொடர்ந்து, தற்போது வரை அவர் மூன்று சினிமா பாடல்களை பாடியுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் இவருக்கு 50 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி கொடுத்தார் என செய்திகள் வந்தது.

இந்நிலையில், ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி, மூன்று சினிமா பாடல் பாடிய ராணு மோண்டல் தான் சினிமா ஸ்டார் ஆகிவிட்டேன் என்கிற தலைக்கனத்தில் செய்த ஒரு செயல் சமூகவலைத்தள நெட்டிசன்களை கோபமடையவைத்துள்ளது.

ராணு மோண்டல் ஒரு கடையில் இருக்கும்போது, கடைக்கு பொருள் வாங்க வந்த பெண் செலஃபீ எடுக்கவேண்டும் என ராணு மோண்டல் தோளில் அந்த பெண் தொட்டதற்காக, ராணு மோண்டல் அந்தப்பெண்ணை கோபமாக திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடீயோவை பார்த்த அனைவரும் ராணு மோண்டலை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ranu mondal troll video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->