லைவ் சாட்டில் ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகர்..! நெத்தியடி கொடுத்த நடிகை..!  - Seithipunal
Seithipunal


கடந்த 2008 ஆம் ஆண்டில் விஜய் நடித்த குருவி என்ற படத்தின் மூலமாக குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை தான் நிவேதா தாமஸ். இந்த படத்தினை தொடர்ந்து நிவேதா தாமஸ் போராளி, நவீன சரஸ்வதி சபதம் என நடிக்க துவங்கினார். அத்துடன் ஜில்லா படத்தில் கூட விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பார். தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து இருந்தார். 

மேலும், இது போல பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நிவேதா தாமஸ் நடித்து இருந்தார். தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தர்பார் படத்தில் நடித்து இருக்கின்றார். இதில் அவர்  ரஜினிகாந்தின் மகளாக நடித்து இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது, 

மேழும், நிவேதா தாமஸ் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இந்நிலையில், நடிகை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பேசி இருக்கின்றார். 

அப்பொழுது அவரிடம் ரசிகர்கள் பலர் மிகவும் மோசமான பல கேள்விகளை கேட்டு இருக்கின்றார். அத்துடன் உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா, என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும், சிலர் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா என்றும் கேள்விகளை கேட்டு இருக்கின்றனர். 

இதன் காரணமாக மிகுந்த கடுப்புக்கு ஆளான நிவேதா தாமஸ் நடிகைகளுக்கு மரியாதை கொடுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் ஒரு பெண்ணிடம் பேசுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கண்ணியத்துடன் பேசுங்கள். அதுபோதும் மற்றப்படி எனக்காக உங்களின் நேரத்தை செலவழித்தற்காக மிக்க நன்றி. விரைவில் சந்திக்கலாம் என்று அதிரடியாக பதிலளித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nivedha thomas in live chat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal