'ஜீன்ஸ்' பிரசாந்த், ஐஸ்வர்யாராய்க்கே டஃப் கொடுத்த கேரள இரட்டையர் ஜோடி! - Seithipunal
Seithipunal


கேரளாவில் நடந்த இரட்டையர்கள் திருமணம்தான் இப்போது ஹாட் டாபிக்காக வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. 

இரட்டையர்களான மாப்பிள்ளைகளுக்கும், இரட்டையர் மணப்பெண்களுக்கும் திருமணம் நடந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜீன்ஸ் படத்தில் வரும் இரட்டையர் ஜோடிகளான பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கே இவர்கள் டஃப்  கொடுப்பார்கள் போல இருக்கே என திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.  

கேரளா மாநிலத்தில் பல்வேறு இரட்டையர்களின் திருமணங்கள் குறித்த காணொளிகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரண்டாவது வழக்கம். 

அப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டையர்களான பாக்யலட்சுமி, தனலட்சுமியின் திருமண வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

சின்னு பொண்ணு என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பிரபலமடைந்த பாக்யலட்சுமி, தனலட்சுமி, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளனர்.

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இவர்கள் பிஏ பரதநாட்டியம் படித்து உள்ளனர். இவர்கள் ஆடிய 'மிழிரண்டில்' நடனம் செம்ம வைரலானது.

திருமணம் செய்தால் இரட்டை சகோதரர்களைத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று ஒற்றை காலில் நின்று இவர்களைப்போலவே இரட்டை சகோதரர்களான சனூப் ஹரி, சந்தீப் ஹரியை திருமணம் செய்துள்ளனர்.

இவர்களின் இந்த திருமண காணொளி இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA CHINNU PONNU MARRIAGE


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->