மனிதாபிமானத்தின் உச்சம்...! ஹோட்டல் தேடி வரும் மாட்டுக்கு தினந்தோறும் சுடச்சுட தோசை...! - நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ...!
height humanity hotel that bakes dosa every day cow that comes looking food Heart warming viral video
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படும் வித்தியாசமான காட்சிகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வேகமாக பரவி விடுகின்றன. அந்த வகையில், மாட்டிற்கு அன்புடன் தோசை ஊட்டும் சாலையோர உணவக உரிமையாளரின் வீடியோ தற்போது இணையத்தில் பலரின் மனதை கவர்ந்து வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பதிவாகியதாக தெரிவிக்கப்படும் அந்த காட்சியில், சாலையோரத்தில் இயங்கும் சிறிய உணவகத்தை நோக்கி மாடு ஒன்று அமைதியாக நடந்து வருகிறது. அந்த மாட்டை கவனித்த கடை உரிமையாளர், உடனே அதற்காக சூடாக தோசை சுடத் தொடங்குகிறார்.
தோசை தயாராகும் வரை, மாடு அமைதியாக நின்றபடி தனது உணவுக்காக காத்திருக்கும் காட்சி பார்ப்போரின் மனதை நெகிழச்செய்கிறது. சிறிது நேரத்தில் இரண்டு தோசைகளை சுட்டெடுத்த கடை உரிமையாளர், மாட்டின் அருகே சென்று அன்புடன் சிறிது சிறிதாக ஊட்டி விடுகிறார்.
அதையும் மாடு ரசித்தபடி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த உணவகத்தை தேடி அந்த மாடு தினமும் வந்து செல்கிறது என தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு தவறாமல் உணவளித்து வரும் கடை உரிமையாளரின் மனிதநேய செயலை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
“நந்தி மகாராஜாவுக்கு அன்புடன் விருந்து அளிக்கும் இந்த காட்சி மனதை தொட்டுவிட்டது” என ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். மேலும் பலரும், “வாயில்லா ஜீவராசிகளுக்கு அன்பு காட்டுவது மனிதத்தின் உயர்ந்த வடிவம்” என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
height humanity hotel that bakes dosa every day cow that comes looking food Heart warming viral video