உதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக!  - Seithipunal
Seithipunal


திமுக இளைஞரணி செயலாளராக, திமுக தலைவர் ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்து, இரண்டாவது ஆண்டிணை அவர் தொடங்குகிறார். தற்பொழுது கொரோனா காலம் என்பதால் நிகழ்ச்சிகள் எதுவும் பெரிதாக நடத்துவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல யாரையும் கூட்டமாக சந்திப்பதற்கும் தற்போது சூழல் சரியாக அமையவில்லை. ஏற்கனவே சாத்தான்குளம் சென்றபோது ஈ பாஸ் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். 

இந்த நிலையில் அவர் கட்சியில் முக்கிய நபர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக கட்சியின் தலைமையில் இருந்து அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கும் இன்று காலை தகவல் பறந்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலில், சமூக வலைத்தளத்தில் ஒட்டுமொத்த திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரும் உதயநிதிக்கு தொடர்ச்சியாக வாழ்த்து சொல்ல வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. திமுக ஐடி விங் ஊழியர்களும் களமிறங்க, இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் ட்ரென்ட் ஆக ஆரம்பித்தார். 

அதே நேரத்தில் திமுக நினைத்துக்கூட பார்க்காத வகையில் #JusticeForSasikala என்ற ஹேஸ்டேக் ஆனது பொதுமக்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த விவகாரம் உதயநிதிக்கு ட்ரெண்ட் செய்த திமுகவிற்கு பலத்த பின்னடைவை கொடுத்தது. ஏனெனில் சசிகலா என்ற இளம்பெண்ணை திமுக நிர்வாகிகள் கடந்த 4 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்து. அவருடைய மரணத்திற்கு காரணமாக இருந்த செய்தியானது திமுகவிற்கு மிகப்பெரிய களங்கத்தினை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக இளைஞரணி நிர்வாகி மீது திமுக நடவடிக்கை எடுக்குமா? இளைஞரணி நிர்வாகி மீது உதயநிதி நடவடிக்கை எடுப்பாரா? சாத்தான்குளம் சென்ற உதயநிதி செய்யூர் செல்வாரா என்று அடுக்கடுக்கான கேள்விகள், விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. 

இதையடுத்து இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், செய்யூர் சம்பவத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என டுவிட் செய்திருந்தார். இந்த நிலையில் திமுகவில் விதிகளை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையான, தற்காலிக நீக்கத்தினை இந்த முறையும் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். 

கடந்த 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிர்வாகிகளை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுவும் தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உதயநிதியை முன்னிறுத்தி ட்ரெண்ட் செய்ய நினைத்த திமுகவிற்கு, திமுக இளைஞரணி நிர்வாகி செயல் தொடர்பான #JusticeForSasikala அதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது. அவர்கள் மீதான திமுக தலைமையின் நடவடிக்கையும் மக்களிடையே பலத்த அதிருப்தியை கொடுத்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Trend set for youth wing leader Udhayanidhi


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal