திமுக கோட்டையை அதிமுக கைப்பற்றியது எப்படி?.. ஐபெக் கொடுத்த மாஸ்டர் ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


திமுக தேர்தல் பிரசாரதிற்காக நம்பியுள்ள தனியார் நிறுவனம், அந்தந்த சட்டமன்ற தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை உறுதி செய்து வரும் நிலையில், இவர்களின் அறிக்கைபடி பரமக்குடி தொகுதியில் அதிமுக வெற்றிவாகை சூடலாம் என்றும், திமுகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரமக்குடி திமுகவினர் இரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

பரமக்குடி தனி சட்டமன்ற தொகுதியாக இருக்கும் நிலையில், இரண்டு முறை அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக கைப்பற்றுவதற்கு முன்னதாக திமுக வசம் இருந்த நிலையில், முன்னதாக நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது. மேலும், இந்த தோல்விக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சுப.திவாகரன் நீக்கப்பட்டது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய செயலாளராக இருந்த கதிரவனுக்கு யூனியன் சேர்மன் பதவி கொடுக்கப்படாத கோபத்தில், அவர் வாக்குசீட்டு மையத்தில் மையை ஊற்றி பிரச்சனை செய்ததாகவும் தெரியவருகிறது. அங்குள்ள தேவேந்திர குல மக்களின் வாக்குகள் திமுகவிற்கு எப்போதும் கிடைக்கும் நிலையில், அதுவும் தற்போது சிதறி கிடைக்கிறது. இதனைத்தவிர்த்து அப்பகுதியில் உள்ள யாதவர் ஓடுகளும் பிரிந்து கிடக்கிறது.

திமுகவின் கோட்டையாக இருந்து வந்த இந்த இடங்கள் அனைத்தும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரிந்துள்ளது. நடந்து முடிந்த யூனியன் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுகவே இப்பகுதியில் முன்னிலையில் இருந்தது. இதனைப்போன்று திமுகவின் பல நிர்வாகிகளின் மாற்றம் உட்கட்சி பூசல் மற்றும் கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் அங்கு நமக்குத்தான் வெற்றி என ஐபெக் திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Politics Plan Ramanathapuram 2021


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal