லடாய்.. மொசக் பஜக்... துண்டை போடும் கூட்டணி கட்சிகள்.. உறுதியாகுமா சீட்?..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களின் தலைமையில் இருக்கும் கட்சியுடன் திடீரென எங்களது கட்சி சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் என போர்க்கொடி தூக்கியுள்ளது.

இந்த விஷயத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிப்படையாக தங்களின் கருத்துக்களை தெரிவித்த நிலையில், திமுக தலைமையின் திட்டப்படி இதற்கு வாய்ப்பில்லை என்ற தகவலும் தெரியவருகிறது. ஏனெனில் 234 தொகுதியிலும் திமுக சின்னத்தில் அமோக வெற்றியை அடைந்ததாக வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் திமுக முழுவீச்சில் களமிறங்கிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் பிற சின்னத்திலும் தேர்தலில் களம்காண அனுமதி வழங்கியது. ஆனால், இதில் திமுகவிற்கு வர வேண்டிய ஓட்டுகள் சில வரவில்லை என்றும் அக்கட்சியின் தலைமை எண்ணியுள்ளது.

மேலும், தற்போதுள்ள சூழ்நிலையை பொறுத்த வரையில் திமுகவின் கூட்டணியில் பிற கட்சிகளும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தைகளும் சென்று வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு அந்த தரப்பு ஒத்துழைக்கவில்லை என்றும் தெரியவருகிறது. 

எதிர்மறையான விமர்சனம், இணையவழி விளம்பரம் மூலமாக திமுக மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல முயற்சிகளை செய்து வரும் நிலையில், எதிர்தரப்பில் இருந்து ஒரேயொரு செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்தையும் தவிடுபிடியாக்கி விடுகின்றனர்.

திமுகவில் சில பிரச்சனைகள் இருப்பதை தவிர்த்து, கூட்டணிக்குள் இருக்கும் உள்நிலவரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தகவலின் படியே பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இப்போதிலிருந்தே பல அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே தங்களுக்கானதை சாதிக்க இயலும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் செய்து வருவதும் தெரியவருகிறது. இதனால் கூட்டணி விரைவில் தீர்மானிக்கப்பட்டு பெரிய அளவிலான மாநாடு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடோடு சிம்புவின் மாநாடும் கலந்துகொண்டாலும் ஆச்சரியத்திற்கும் இல்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Party Alliance


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->