தேர்தலுக்காக இணைந்த துருவங்கள்.. அதிரடியாக களம்காணும் திமுக.! - Seithipunal
Seithipunal


திமுகவை பொறுத்த வரையில் கலைஞர் இருக்கும் வரை திமுகவின் டெல்லி முகமாக இருந்தவர் கனிமொழி. கலைஞரின் மறைவுக்கு பின்னர் டெல்லி முகம் பொறுப்பு சபரீசனிற்கு சென்றது. இதனையடுத்து கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், திமுகவின் தேர்தல் வியூகத்திற்காக பிரசாந்த் கிஷோருக்கு பதவி வழங்கப்பட்டது. இந்த விஷயத்தில் சபரீசனிற்கு முக்கிய பங்கு உள்ளது என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பிரசாந்தை கடந்த 2015 ஆம் வருடம் முதலாகவே தேர்தல் வியூக வகுப்பாளராக மாற்ற திமுக முயற்சி செய்த நிலையில், மு.க. ஸ்டாலின் மீது அப்போது இருந்த ஈர்ப்பு குறைபாடு காரணமாக பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், இறுதியாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டு நெருக்கமான வட்டாரத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

கூட்டணி விவகாரத்தில் சபரீசன் சிறப்பாக கவனிப்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத்தை பொறுத்த வரையில் சபரீசனுக்கு நெருக்கமான பழக்கம் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்த சமயத்தில், கனிமொழி எம்.பி பதவிக்கு முயற்சி செய்து வந்தார். இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே உதயநிதி அரசியலில் களமிறக்கப்பட்ட நிலையில், கனிமொழி திமுகவில் ஓரம்கட்டப்படலாம் என்று பேச்சுக்கள் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது உதயநிதி, சபரீசன் ஆகியோருக்கு தேர்தலில் வாய்ப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் கனிமொழியை ஓரம்கட்டப்படுவதாக எழும் பேச்சுவார்த்தையை மறைக்கும் வகையில் பல முயற்சிகளும் அக்கட்சியின் தலைமை சார்பாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் பிரச்சனை பெரிதாகும் என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த தருணத்திற்கு உள்ளாகவே சபரீசன் மற்றும் கனிமொழி நேரடியாக சந்தித்துள்ளதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுகவின் டெல்லி முகத்தை பொறுத்த வரையில் கனிமொழி - சபரீசன் இடையே இருந்த பனிப்போர் இப்பொது முடிவு பெற்றுள்ள நிலையில், திமுகவின் அடுத்தகட்ட வெற்றிக்காக இருவரும் இணைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kanimozhi and Sabareesan Join a team


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal