பாஜகவின் காய் நகர்தலில் அதிமுக கூட்டணியின் முக்கிய கட்சி?.. அதிரிபுதிரி ஆட்டங்களை அருமையாக செய்யும் பாஜக.!! - Seithipunal
Seithipunal


வருகிற செப்டம்பரில் கொரோனா நெருக்கடி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை நடத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதலை தந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்றம் கூடும் பொழுது பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதில், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சேர்த்துக்கொள்ள பிரதமர் முடிவு செய்திருப்பதாக த.மா.கா. வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், பா.ஜ.க. மேலிடத்தில் உள்ளவர்களோ, ’’ஜி.கே.வாசனை பா.ஜ.க.வில் இணைய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாசன் பிடிகொடுக்கவில்லை. ஒருவேளை அவர் மத்திய அமைச்சரானால், சட்டமன்றத் தேர்தலின் போது கட்டாயம் அவர் பா.ஜ.க.வில் இணைவார். இதற்கு  ஒப்புக்கொண்டால் அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.‘’ என்கின்றனர். 

இது குறித்து த.மா.கா. சீனியர் ஒருவர் மிக அழுத்தமாக, "த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதற்கும், அமைச்சர் பதவிக்கும் சம்மந்தமில்லை. மந்திரி பதவிக்காக கட்சியை ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் அடகு வைக்க மாட்டார்." என கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP try to alliance with GK Vasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->