ஊரடங்கு வாழ்க்கை.. கழுகின் வாழ்க்கை பாடத்தில் சரியான உதாரணம்.!! - Seithipunal
Seithipunal


இயல்பாக கழுகு பற்றிய நாம் பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம். அந்த வகையில், கழுகு என்பது அக்ஸிபிடோ என்னும் பறவை குடும்பத்தை சார்ந்ததாகும். இது வலுவான மற்றும் பெரிய கொன்றுண்ணி பறவையாகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பும், அதிகாரம் மற்றும் சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக திகழும். 

இந்த பறவைக்கு 40 வயதாகும்போது ஒரு சவால் ஏற்படும். அந்த சவாலில் அது என்ன செய்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வாழ்நாள் வரை நீட்டிக்கப்படும். கழுகு 40 வயதை அடைந்தவுடன் இரையை கொத்தி தின்னும் அலகு மங்கி வளைந்து விடும். மேலும், இரையை பற்றிக்கொள்ளும் கூர்மையான நகங்களும் அதன் கூர்மையை இழந்துவிடும். 

இதுமட்டுமல்லாது பறக்க துணையாக இருக்கும் சிறகுகளும் பெரிதாகி பாரம் அதிகரித்து உடல் பலமடையும். இந்த தருணத்தில், தன்னைத்தானே கழுகு ஒரு இரண்டு நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்தி கொள்ளும். இதன்படி, உயர்ந்த மலைக்கு சென்று அங்கே இருக்கும் பாறைகளில், தனது சிறகை வேகமாக அடித்து உடைத்துக் கொள்ளும். 

பின்னர் புதிய அலகு வரும்வரை காத்திருக்கும். புதிய அலகு வளர தேவையான 150 நாட்கள் யார் கண்ணிலும் படாமல், சிறு சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்கிறது. தொடர்ந்து இவ்வாறாக மூன்று மாதம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மீண்டும் களத்தில் வெற்றிகரமாக இறங்கி வெற்றியடையும். 

தற்போது கரோனா வைரஸ் பரவாமல் இருக்க நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஒரு சிறந்த முறையாக இருக்கிறது. தனிமை என்பதை சாபமாக கருதாமல், அதனை வராமாக நினைத்து செயல்படுவதே சாலச்சிறந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avoid corona virus under quarantine like a Eagle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->