"ஜெயலலிதா ஒரு குற்றவாளி".!! ட்விட் போட்ட பாஜக நிர்வாகியை வெளுத்து வாங்கிய அதிமுக.!!
Aiadmk react again BJPs criticism on Jayalalithaa
தமிழக பாஜக ஐடிவிங் மாநில துணைத்தலைவர் கார்த்திக் கோபிநாத் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோவை பதிவிட்டிருந்தார். அதனை அதிமுக ஆதரவாளர் ஒருவர் "எந்த கெட்ட பழக்கமும் இல்லம் மேடம். என்ன கோயில் உண்டியல மட்டும் திருடுவான் என பங்கமாக கலாய்த்து பதிவிட அது வைரலானது. அதற்கு எதிர்வினையாற்றிய கார்த்திக் கோபிநாத் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு அதே அதிமுக ஆதரவாளர் "உண்டியல் மேலே மட்டும் குறியாக இருந்தவனை இப்படி ட்ரிக்கர் பண்ணி விட்டுட்டீங்களே" என கார்த்திக் கோபிநாத் மீது கோவில் கட்டி தருவதாக கூறி பணம் வசூல் செய்த மோசடி குற்றச்சாட்டு குறித்து மறைமுகமாக விமர்சனம் முன் வைத்தார்.

அதை ரீட்விட் பாஜக மாநில நிர்வாகி கார்த்திக் கோபிநாத் "ஜெயலலிதா அம்மையார் மீது பெரும் மதிப்பு இருந்தாலும், நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்த ஒருவரை தலைவியாக வைத்துக் கொண்டு அரசியல் பழிவாங்குகளுக்காக திமுக.." என முடித்து ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பத்திரிக்கை செய்தியை பகிர்ந்திருந்தார்.
இதனால் கோபம் அடைந்த அதிமுக தரப்பு கார்த்திக் கோபிநாத்தை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க தொடங்கியதை அடுத்து அவர் அந்த பதிவை சில மணி நேரங்களில் நீக்கினார். ஆனாலும் அந்த பதிவில் ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பெருமையாக பேசிய நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பதிவிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

வாக்குகளுக்காக மட்டுமே அதிமுக தலைவர்களை நரேந்திர மோடி பாராட்டி பேசியதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதனை நிரூபிக்கும் வண்ணம் தமிழக பாஜக மாநில தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Aiadmk react again BJPs criticism on Jayalalithaa