சமூக வலைதளங்களுக்கு வயது கட்டுப்பாடு அவசியம்...! - ஆஸ்திரேலியா தொடங்கி இங்கிலாந்து வரை சிறார்களுக்கு சமூக ஊடகத் தடை சட்டம்...! - Seithipunal
Seithipunal


இன்றைய தொழில்நுட்ப உலகில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் சமூக வலைதளங்கள் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டன.

ஆனால் இளம் வயதினர்கள் இதில் அளவுக்கு மீறி மூழ்குவதால், கவனச் சிதறல், கல்வியில் பின்னடைவு, தூக்கமின்மை, மனஅழுத்தம், தனிமை உணர்வு போன்ற பல்வேறு உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த தீமைகளை உணர்ந்து, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசு கட்டுப்பாடு விதித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்தத் தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதேபோல் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக ஊடகத் தடைக்கான சட்ட முன்மொழிவை உருவாக்க ஆலோசனைகள் கடந்த மாதம் தொடங்கியுள்ளன; விரைவில் இது சட்டமாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Age restrictions necessary social media platforms From Australia England social media ban laws minors


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->